Mango Benefits in Tamil | மாம்பழத்தின் பயன்கள்

mango benefits in tamil
Spread the love

பொதுவாகவே மாம்பழம் என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழவகையாகும் அதனுள் ஏராளமான  மருத்துவ குணங்கள் உள்ளன. சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவோம் அந்த அளவிட்கு பயன்களைக் கொண்டு காணப்படுகின்றது.அத்தைகைய பழத்தின் பலா பயன்கள் பற்றி இனி விரிவாக பார்ப்போம்.(Mango Benefits in Tamil)

மாம்பழத்தில்  கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் போன்றவற்றின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது என்பது தெளிவான உண்மையாகும்.மேலும் இவற்றில் முக்கியமாக நார்ச்சத்து , வைட்டமின் B6, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் காணப்டுகின்றது . மக்னீசியம்,பொட்டாசியம், மற்றும் செம்பு  போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறதைக் காணலாம். 

மாம்பழத்தின் பயன்கள் |Mango Benefits in Tamil

1.கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தல் 

மாம்பழத்தில் காணப்படும்  அதிக அளவான் பெக்டின் நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்  குறைத்திட  பெரிதும் உதவுகின்றது.மேலும் மாம்பழங்கள் கொழுப்பற்ற பழவகையாகும்.

2.கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுதல் 

mango benefits in tamil

உண்மையில் கர்ப்பமான பெண்களுக்கு அதிக அளவிலான  இரும்புச் சத்து  தேவைப்படுகின்றது. அவர்கள் மாம்பழங்களை  உட்கொள்வது  மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.மேலும் கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழமையாகும். அதற்கு பகரமாக வளமான இரும்புச்சத்துள்ள மற்றும் கனியுப்பு  நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்ததாகக் காணப்படுகின்றது.

 

3.எடை அதிகரிக்க உதவல் 

உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் ( Mango Benefits in Tamil) சாப்பிடுவது மிக சிறந்த வழிமுறையாகும்  பொதுவாக 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது . மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை குளுகோஸ் ஆகா  மாற்றுவதால், எடையை அதிகரிக்க பெரிய அளவில்  உதவி புரிகின்றது.

 

4.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவல் 

இவற்றில்  உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.இதன் காரணமாகவும் . வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) காரணமாகவும்  இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு நிவரணம் இயற்கையில் அளிக்க  மருந்தாகவும் காணப்படுகின்றது.மேலும் கனியுப்புக்கள் அதிக அளவு காணப்படுவதால் இரத்த பாதை சீராக்கப்படுகின்றது

 

5.செரிமானப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளித்தல் 

செரிமானம்  மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படுகின்ற அனைத்து வகை  பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பழ வகையாக இது விளங்குகின்றது. மாம்பழங்களில் காணப்படும்  இயல்பான  செரிமான நொதிய ங்கள் இயற்கையாக செரிமானம் அடை ந்திட உதவி புரிகின்றது,

 

6.முகப்பருக்கலில் இருந்து பாதுகாப்பு அளித்தல்

mango benefits in tamil 

முகப்பருக்கலைக் குணப்படுத்தும் திறமை  மாம்பழங்களுக்கும் உண்டு.  ஏனெனில் சருமங்களிழும் தோல்களின்  உள்ள மூடப்பட்ட  துவாரங்களை விடுவிக்க அது பெரிதும் உதவி புரிகின்றது. இந்த துவாரங்கள் திறக்கப்பட்டவுடன்  முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிப்பதைக் இலகுவாகக் அவதானிக்க முடியும். இதற்கு மாம்பழ face  வாஷ் சிறந்த பயணிக்கும் ஒன்றாகும்.

 

7.இரத்த சோகை பிரச்சனைக்கி நிவாரணி 

மாம்பழத்தில் அதிகமாக காணப்படும்  இரும்புச்சத்து காரணமாக , இரத்த சோகையினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது மிகவும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. மாம்பழங்களை வாரந்தோறும் எடுத்துக் கொள்வது குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்த பெரிதும் உதவி புரிகின்றது.(Mango Benefits in Tamil)

 

8.மூளை வளர்ச்சிக்கு உதவல் 

மூளையின் வளர்ச்சிக்குரியதும் செயல் திறனை அதிகரிக்கக் கூடியதுமான விட்டமின்களும்  கனியுப்புக்களையும் கொண்டு காணப்படுவதால் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

 

9.இளமையான தோற்றதைப் பெற உதவல் 

மாம்பழங்களில் காணப்படும் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் காரணமாக இளமையான  தோற்றத்தை வெளிப்படுத்த மாம்பழங்கள்   உதவிபுரிகின்றன.

10.புற்றுநோய்யில் இருந்து தடுத்தல் 

மாம்பழங்களில்  அதிகளவு காணப்படும் பெக்டின், புரோஸ்டேட் சேர்வைகள் காரணமாக புற்று நோய் உருவாவதைத்  தடுக்கின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *