Apple Benefits in Tamil |அப்பிள் பழங்களின் பயன்கள்

apple benefits in Tamil
Spread the love

இன்று அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில்  ஆப்பிள் பழங்கள் முதலிடத்தில் காணப்படும் பழ வகையாக காணப்படுகின்றன. விசேடமான பயன்கள் காரணமாகவும் ஆப்பிள் பழங்கள் அனைவருக்கும் பிடித்த பழமாகவும், அதனுடைய வடிவத்திலும் அமைப்பிலும் அனைவரையும் கவரக் கூடியதாக இருப்பதால்  அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.(Apple benefits in Tamil)

 

 இவ்வாறு காணப்படுகின்ற அப்பிள் பழங்கள் பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டதாகவும்  காணப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறை என்றாலும் சரி சித்த மருத்துவ முறையாக  இருந்தாலும் சரி அப்பிள்  பழங்கள்  உ டைய பலன்கள் பலவாகும் இந்த பதிவில் இவை பற்றி விரிவாகப்  பார்ப்போம்.அனைத்து வகையான பழங்கள்  போன்று  அப்பிள் பழங்களில்  பல பயன்கள் காணப்பட்டாலும் சில விசேடமான பயன்களும் காணப்படுகின்றன.அவை அப் பழங்களுக்கு  உரித்தான தன்மைகள் ஆகும்.

அப்பிள் பழங்களின்  விசித்திரமானபயன்கள் |Apple benefits in Tamil

 

  1. செரிமான பிரச்சனைக்கு உதவுகிறது

விசேடமாக பழ  வகைகளில் அதிகளவான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றது. அதுபோலவே ஆப்பிள் பழங்களில் அதிக நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த வகையான நார்ச்சத்துக்கள் உடலில் ஏற்படுகின்ற செரிமான பிரச்சினைக்கு பல்வேறு கட்டங்களில் உதவி புரிகின்றன. அப்பிளில்  காணப்படும் அதிகளவான நார்ச்சத்துகள் செரிமான பிரச்சனை ஏற்படுவதிலிருந்தும் ஏற்பட்ட பின்னர் அவற்றினைக்  குறைப்பதற்க்கும் பெரிதும்  உதவி புரிகின்றன.

 2.இதய  ஆரோக்கியத்திற்கு உதவுதல்

அப்பிள்  பழங்களில் காணப்படுகின்றன விசேட  தன்மை இதய நோயிலிருந்து விடுபட சிறந்த பயனளிக்கிறது மற்றும் அவற்றில் காணப்படுகின்ற கனியுப்புக்கள் ,விட்டமின்கள், சக்திகள் அனைத்தும்  இதய தசைகளை வலுப்பெற்று இருப்பதற்கு உதவிபுரிகிறது.

 

 தங்களது இதயங்களை வலிமையாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தினந்தோறும் ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வது மிக சிறந்த பயனளிக்கும் செயல்முறையாகும் மேலும் அவற்றில் காணப்படும் நார்ச்சத்துகள் தசைகளை வலுப்பெறச் செய்து உயர் குருதி அமுக்கம் பாதிப்பிலிருந்து தடுப்பதற்கு உதவுகிறது.

 

 3.புற்றுநோய் கலங்களை அழித்து உடலைப் பாதுகாத்தல் 

apple benefits in tamil

 இன்றைய சூழலில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புற்றுநோய் கலங்கள் உடம்பில் உருவாக்கம் பெறுகின்றன. அவற்றை முழுமையாக அழிப்பதற்கு ஆப்பிள் பழங்களின்  சக்தி போதுமானதாகக் காணப்படுகிறது.மேலும்  அப் பழங்களில்( Apple benefits in Tamil) காணப்படுகின்ற விட்டமின்களும் கனியுப்புக்களும் புற்றுநோய்களுக்கு எதிராக செயற்பட்டு   புற்றுநோய் கலங்கள் உருவாவதை தடுக்கிறது.

 

 மேலும் இதனுடைய தோலில்  அதிகளவில் சக்தி  காணப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் ஏற்படுவதில் இருந்தும்  பாதுகாக்கின்றன. 

 

 4.கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்த உதவல் 

உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் நிறைந்து  காணப்படுவதால்  பல்வேறு நோய்கள்  உருவாகுகின்றன இதனால் நமது ஆயுட்காலமும் குறைந்து போகிறது.பொதுவாக ஆப்பிள் பழங்களின் காணப்படுகின்ற நோய் எதிர்ப்புசக்தி தன்மையும் கெட்ட கொழுப்புகளை அகற்றும்  தன்மையையும் நமது உடலைப் பாதுகாத்து கொலஸ்ட்ரோல் உருவாகும்  நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் இதர நோய்கள் அண்டாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

 

5. பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்தல்

எமது உடலில் பல்வேறுபட்ட நுண்ணங்கிகள் வாழ்கின்றன. அவை நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் ஆகும்.அவ்வாறு நன்மைபயக்கும் நுண்ணங்கிகள் மூலம்  உடல்  சக்திப் பரிமாற்றச்  செயன்முறை நிறைவேறுவதற்கும் அவைகளுடைய திறனான செயல்முறைக்கும் அப்பிள் பழத்தின்  சக்தி காரணமாகிறது மேலும் உடல் சமநிலை, உடல் போஷாக்கு தன்மை மற்றும் செரிமான பிரச்சனைகள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைக்கும் இந்த நுண்ணியிர்கள் உதவுவதால் அவைகளின் செயல் முறைக்கு இந்த பாக்டீரியாக்களின் மூலம் கிடைக்கப் பெரும் சக்தி தேவையாக அமைகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு இவை உதவுகின்றன.

 

 6.இரத்தச்சோகை நோயிலிருந்து அகற்றுதல்

தொடர்ச்சியாக  ஆப்பிள் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் அதிகப்படியான ரத்த சோகை நோய் நிலைமை ஏற்படுவதில் இருந்து தடுத்துக்கொள்ளலாம் அப்பிள் பழங்களில்  காணப்படுகின்ற விசேஷட தன்மை காரணமாக ரத்த உற்பத்தியும்,செங்குருதிக் கலங்கள் உடைய எண்ணிக்கை அதிகரிப்பதால் உடலில் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வது ஒரு பயனளிக்கும் சிறந்த செயல் முறையாகும்.

 

7.நீரிழிவு நோயில் இருந்து பாதுகாத்தல்

பொதுவாகவே உலகில் அதிகமானோருக்கு  நீரிழிவு  நோயினுடைய தாக்கம் காணப்படுகிறது இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க ஆசைப்படுவார்களும் ஆப்பிளை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம்.காபோவைதேரேற்று  பதார்த்தங்கள் உடலில் அதிக அளவில் சேருவதைத் தடுத்து இவ்வகை நீரிழிவு நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் சென்றடையும் விதத்தையம் சமநிலைப்படுத்துகிறது.இதனால்  நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டை எம்மால் கட்டுப்படுத்த முடிகிறது.

  8.பொலிவான சருமத்தைப் பெற உதவும்

அப்பிள் பழங்களில்( Apple benefits in Tamil )காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட் தன்மை காரணமாகவும் தாது உப்புக்கள் காரணமாகவும் பொலிவாகவும் அழகாகவும் சருமத்தை  வைத்துக் கொள்ள ஆப்பிள் பழங்களை உட்கொள்வது  மற்றும் அவை கொண்டு தயாரிக்கப் பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது  சருமத்தைப்  பாதுகாக்க உதவுகிறது மற்றும் பொலிவடையும் செய்கின்றது.

 

 9.முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு 

apple benefits in tamil

அப்பிள் பழங்களில்  காணப்படுகின்ற வைட்டமின்களும் கனிமங்களும் மற்றும் தாதுஉப்புக்களும் முடி வேர்களுக்கு  சக்தியை வழங்கும் தன்மை  காரணமாக முடி வளர்வதற்கு மிகவும் பயனளிக்கிறது. இதனால் முடி தொடர்பான பிரச்சினைகள்  கட்டுப்படுத்த உதவுகிறது மேலும் உச்சந்தலையில் ஏற்படுகின்ற பொடுகு தன்மைக்கும்  சிறந்த பயனளிக்கிறது.

 

 10.உடல் வலிமை அடைய உதவுதல்

ஆப்பிளில் காணப்படுகின்ற ஆன்டிஆக்சிடன்ட் ,விட்டமின்களும் உடலை வலுவடையச் செய்கின்றன அதாவது அப்பழங்கலைக் தினமும் எடுத்துக் கொள்வது  உடல் வலிமை அடைய உதவி புரிகின்றது.

 

  11.கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்தல்

apple benefits in tamil

 அப்பிள் பழங்கலில்  காணப்படுகின்ற வைட்டமின் ஏ போன்ற அதிகளவான சத்துக்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.மேலும் குறிப்பாக கண் புரை போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

 

12.நோய்  எதிர்ப்புச்  சக்தியை உருவாக்குதல்

உடலில் அதிகப்படியான சத்து குறைபாட்டு தன்மையினால்  நோய் நிலைமைக்கு நாம் உள்ளாகின்றோம். மேலும் ஆப்பிள் பழத்தில் காணப்படும் சக்தி காரணமாக நமது உடம்பில் நோய் எதிர்ப்பு அதிகரித்து நோய் நிலைமைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவ முடிகிறது

 

 13.எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுதல் 

அப்பிள் பழத்தில் காணப்படுகின்ற இரசாயன தன்மை காரணமாக எலும்புகளின்  பல்வேறுபட்ட ஆரோக்கிய தன்மைக்கு உதவுகின்றன குறிப்பாக இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.மற்றும் தசைகளின் ஆரோக்கியத்துக்கும்  வளர்ச்சிக்கும் பாரிய அளவில் உதவி புரிகின்றன.

 

14. மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து வைத்தல்

அப்பிள் பழத்தில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையால் அதிக அவதிப்படுவர்களுக்கு பெரிதும் உதவி புரிகின்றது.மேலும் தினந்தோறும்  எடுத்துக்கொள்வது தன்னுடைய மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ள உதவுகிறது.

 

 15.ஞாபக சக்தியை அதிகப்படுத்த உதவல் 

ஆப்பிள் பழங்களில் காணப்படுகின்ற ஒருவகை வேதிப்பொருள் ஞாபக சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது அதாவது அந்த வேதிப்பொருள் மூளை கலங்களை பாதுகாத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவி ஞாபகத் திறனை அதிகரிக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *